சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
மேலும், இவர்களுக்கு கொரோனா தவிர உடல்ரீதியான வேறு சில பிரச்சனைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத 23 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனால் தமிழகத்தில் கொரோனவால் ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்புகள் பலி எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15க்கும் மேற்பட்டதாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை நிலையில், சென்னையில் இன்று மேலும் 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.