சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கான இ பாஸ் நிறுத்தப்படவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தற்போது ஊராடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்றைக்குள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அதற்கான திட்டங்கள் உள்ளதா ? என்பதை தமிழக அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு, முழு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கான எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை என்று 100% உறுதிபட தெரிவித்தது. அதேபோல் நேற்றைய தினம் சென்னையில் இருந்து வெளிமாநிலம் அல்லது மாவட்டங்களுக்கு செல்வோருக்கு, இ- பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் சென்னையிலிருந்து வெளியூர் செல்ல விரும்புவோர்களுக்கான இ பாஸ் முழுமையாக நிறுத்தப்படவில்லை. அவர்கள் முறையான காரணத்தைக் கொண்டு இ பாஸ்க்கு அப்பளை செய்யும் போது அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து பரிசோதனை மேற்கொண்ட பின் இ பாஸ் வழங்கப்படும். அதை பெற்ற பின் அவர்கள் சென்னையை விட்டு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டது.