Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி..!!

செங்கல்பட்டில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000த்தை கடந்துள்ளது. மொத்தம் 2, 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாக கொரோனா தொற்று 1,00 க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தற்போதைய நிலவரப்படி 60 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டில் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்றுவரை 2,444 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. அதில், 903 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,580 ஆக அதிகரித்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலை நிமித்தமாக சென்னையில் இருந்து மக்கள் தினமும் வருகின்றனர். இதன் காரணமாவே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |