சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2, 504ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந் செங்கல்பட்டிற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பைக், ஆட்டோவில் செல்பவர்களிடமும் இ-பாஸ் இல்லையேற்றால் அனுமதி மறுக்கப்பட்டுகிறது. காரில் செல்பவர்களுக்கு மட்டுமே கேட்ட நிலையில் பைக், ஆட்டோவில் செல்வோருக்கும் இ-பாஸ் கேட்கப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.