Categories
மாநில செய்திகள்

ஜூன் 16ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் – தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பாசனத்திற்காக கல்லணை வரும் 16ம் தேதி திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி இன்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜூன்16ம் தேதி பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.

கல்லணையிலிருந்து, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில், தண்ணீர் திறந்து விடப்படம் என கூறப்படுகிறது. கல்லணை மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |