தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தேவலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. கூடலூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 4 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல் அளித்துள்ளது.
மீன்வர்களுக்கு எச்சரிக்கை :
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரம் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.