Categories
உலக செய்திகள்

பொய் சொல்லிக்கொண்டு திரியும் சீனா….. காண்டான ஐரோப்பிய ஆணையம் …!!

கொரோனா  குறித்து சீனா பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது

சீனா கொரோனா தொற்று குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணைய துணை தலைவர் வீரா கூறுகையில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலும் உலக அளவிலும் கொரோனா குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது. உதாரணமாக சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த அமெரிக்கா உயிரியல் ஆய்வுகளை நடத்தி வருவதாக சீன அலுவலர்களும் ரஷ்ய ஊடகங்களும் தெரிவித்து வருகின்றனர்.

ஆதாரம் நம்மிடம் இருக்கும் போது இவ்வாறு சதி வேலையில் ஈடுபடுபவர்கள் எதற்காக நாம் அம்பலப்படுத்த கூடாது. இந்த விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் வலிமையை வெளிப்படுத்த முடியும்” எனக் கூறினார். ஐரோப்பியாவில் தொற்றின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் அதிகளவில் இருப்பததாகவும், சுகாதாரப் பணியாளர்கள் அவர்களது வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும், இதனால் பலரும் வீடுகளிலேயே மரணம் அடைந்து வருவதாகவும் சீன தூதரக இணையதளத்தில் செய்தி வெளியிட்டது. இது பிரான்ஸ் அரசியல்வாதிகள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ்க்கு எதிராக 80 பிரான்ஸ் அரசியல்வாதிகள் நிறவெறி கருத்துக்களை தெரிவித்தனர் என சீன தூதர் ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகள் யோசனை செய்து வருகின்றது. 2019ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சீனாவை எதிரி நாடு என குறிப்பிட்டிருந்தது. அராஜகப் போக்கு, அத்துமீறல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை ஒழுங்குபடுத்தும் திருப்புமுனையாக அந்த அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கருதியுள்ளன.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |