Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வதந்தியை பயன்படுத்தி…. தப்பி செல்ல முயற்சி…. கூட்டமாக வந்த வாகனகங்களை திருப்பி அனுப்பிய போலீஸ்…!!

முழு ஊரடங்கை காரணம் காட்டி சென்னையை விட்டு தப்பி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பிழைப்பிற்காக சென்னை வந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டனர். சிலர் சென்னையில் கொரோனா அதிகம் பரவி வருவதால் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தனது உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாள்தோறும் அதிகாரிகளுக்கு தெரியாமல் பயணிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தற்போது சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக பொய்யான தகவல்கள் வேகமாக பரவி வந்தது. இதை சாக்காக வைத்துக்கொண்டு இ பாஸ் கூட இல்லாமல் அவசர அவசரமாக காரை பிடித்துக்கொண்டு சென்னையை விட்டு மக்கள் வெளியேற முயற்சிக்க, பரனூர் சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து இ பாஸ் குறித்து கேட்டதற்கு முழு ஊரடங்கை காரணமாக கூறினர். இதையடுத்து முழு ஊரடங்கு என்பது பொய்யான செய்தி. வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் திரும்பிச் செல்லுங்கள் என அனைத்து கார், பைக், ஆட்டோ என அனைத்தையும் காவல் துறையினர் தற்போது திருப்பி அனுப்பி வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |