கேரளாவில் சூதாட்ட கும்பலை பிடித்து கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு ரூ9 லட்சம் சன்மானம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய சூதாட்டக் கும்பலை தனி நபராக காவல்துறை அதிகாரி ஒருவர் படிப்படியாக கண்காணித்து தகவல் அளித்து ஒட்டு கும்பலையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். இவருக்கு அப்போதே அப்பகுதி மக்களால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதற்கு காரணம் என்னவெனில், அந்த சூதாட்ட கும்பல் மிகப் பெரிய ரவுடி கும்பலும் கூட அவர்களை எதிர்க்க பலரும் பயந்த நிலையில், இவரது துணிச்சலான நடவடிக்கை அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இது குறித்த வழக்கானது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், இன்று கேரள நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த சூதாட்டக் கும்பலை பிடித்தது முதல் தற்போது தீர்ப்பளிக்க சாட்சியங்களை திரட்டியது வரை உதவியாக இருந்த காவல்துறை அதிகாரிக்கு சன்மானமாக சூதாட்ட கும்பலை பிடித்த போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ18 லட்சத்தில் ரூ9 லட்சத்தை சன்மானமாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.