Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பலி… இன்று மட்டும் 18 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,342 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 6,73,906 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 33 தனியார் மையங்கள் என மொத்தம் 78 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,186 பேர் ஆண்கள், 796 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 25,167 ஆண்களும்,15.514 பெண்களும், 17 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 18,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயதுக்குட்பட்ட 2,097 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 34,042 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,559 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |