Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 78 பேருக்கு கொரோனா…. சிகிச்சையில் 1,303 பேர்..!!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மட்டும் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கேரள மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 999 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதிப்பு 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,303 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று கண்ணூர் பகுதியில் 71 வயது முதியவர் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜூன் 9ம் தேதியன்று மும்பையில் இருந்து ரயிலில் கேரளா திரும்பியுள்ளார். மேலும் இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |