ஊரடங்குகாலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான கட்டணத்தை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணத்தை பயணிகளுக்கு திரும்பச் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் விசரனை இன்று நடைபெற்ற போது, ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஊரடங்கால் விமான நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளது, எனவே பயணிகளுக்கு முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
விமானத்தில் பயணம் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுக்கும் நடைமுறை உலகில் எங்கும் கிடையாது. இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விவாதித்து தீர்வு காண இருக்கின்றோம் என்று வாதிட்டார். அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சரும் பயணிகளுக்கு முழு கட்டணத்தை வழங்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.இதில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விமான பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்ட விமான கட்டணத்தை திருப்பி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், விமான நிறுவனங்களுடன் கலந்துபேசி பயணிகள் டிக்கெட் பணத்தை திரும்ப வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நீதிபதி சார்பில் கேட்டுக் கொண்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.