Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது…. !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவோர் விகிதமும் இருந்து வருவது சற்று நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் பல மாநிலங்களில் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக இருக்கிற நிலையில் தற்போது வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது வெளியாகிய புள்ளி விவரங்களின்படி இன்று 7,666 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 3 லட்சத்து 5 ஆயிரத்து 951 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 5,423 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளதால் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 395 ஆக உள்ளது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 823 என்ற நிலையில் இருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இன்று ஒரே நாளில் 216 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 8,718 அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 3 ஆயிரத்து 493 பேருக்கும், தமிழகத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி இரண்டு பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |