சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு என வதந்தியை பரப்பியவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
சென்னையில் முழு ஊரடங்கு என்ற செய்தி பரவியதை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழக முதலமைச்சரிடம் இது குறித்து கேட்க அதற்கு தமிழக முதலமைச்சர் அளித்த பதில், “சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்பது தவறான செய்தி. வாட்ஸ் அப்பில் நானே பார்த்தேன். என்னுடைய பெயரில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்டும் என்பது தவறானது என நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் 87 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நெருக்கமாக மக்கள் வசிப்பதால் தொற்று எளிதாக சென்னையில் பரவுகிறது. கொரோனாவுக்கு ஒரே மருந்து தான் இருக்கிறது. மக்கள் கட்டுப்பாடுடன் இருப்பது தான் அது. முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், சோப்பு போட்டு கைகளை கழுவுவது அவசியம். கொரோனாவை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே தத்தளிக்கிறது. சாதாரண மக்கள் வாழும் இடம் தமிழ்நாடு.
இந்த அளவுக்கு கட்டுப்பாடு இருப்பதே இங்கு மிகப்பெரிய விஷயம். ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற தவறான தகவலை பரப்பியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். நீதிமன்றத்தில் ஊரடங்கு தொடர்பான வழக்கு வந்தபொழுது தமிழக அரசு அளித்த பதில் “சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் இல்லை. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான இ-பாஸ் சேவையை நிறுத்தப்படவில்லை. நிறுத்தப்படுவதாக கூறுவது வதந்தி” என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இ-பாஸ் குறித்த வதந்தியும் பரவிக்கொண்டிருந்தது.
சென்னை மட்டுமல்ல அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி எல்லாம் மீண்டும் முழு ஊரடங்கு போடப் போகிறார்கள் அது மட்டும் இல்லை சென்னையில் இருந்து வெளியே போவதற்கு இ-பாஸ் கொடுக்க மறுக்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட வதந்திகள் கடந்த 4 நாட்களாக பரவி வந்தது. மக்களிடையே பீதியை ஏற்படுத்தி விட்டார்கள் இந்த கலகக்காரர்கள். ஆனால் தமிழக அரசு மீண்டும் ஊரடங்கு சென்னையில் போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எந்த செய்தியாக இருந்தாலும் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டால் மட்டுமே அதனை நம்ப பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது