புதுக்கோட்டை கொரோனா பாதிப்பே இல்லாத ஆலங்குடியில் சென்னையில் இருந்து மாணவர்கள் வந்த நிலையில்கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசித்து வரும் இரண்டு பெண்கள் சென்னையில் தனது கல்லூரி படிப்பை படித்து வந்துள்ளனர். அதில், ஒருவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பையும், மற்றொருவர் எம்பிஏ படிப்பையும் படித்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இபாஸ் பெற்று சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஆய்வுக்காக காத்திருந்த மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்டம் ராணியார் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இருவரும் ஆலங்குடியில் அவரவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீடு, மற்றும் ஏரியாக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் இதுவரை ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகாமல் இருந்து. தற்போது சென்னையிலிருந்து வந்த மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.