Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகளின் காதல் திருமணத்தால் தாயும்…. 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனி அருகே 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் மும்பையில் இட்லி கடை வைத்து பிழைப்பை ஓட்டி வந்துள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், அங்கே பிழைப்பை ஓட்ட முடியாமல், சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு வந்த நிலையில், கடந்த மாதம் முத்தையாவின் மூத்த மகள் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்துள்ள நிலையில் , வீடு அமைந்தவுடன் காதல் கணவருடன் அவரும் சென்றுவிட்டார்.

இதையடுத்து மே 19 ஆம் தேதியன்று மகள் ஓடிப் போன மன விரக்தியில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முத்தையாவிற்கு தனது முதல் மனைவியை விட, இரண்டாவது மனைவியின் மீது காதல் அதிகம். ஆகவே அவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் அவரது வீட்டில் இரண்டாவது மனைவி தூக்கில் தொங்கிய அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |