மிதுன ராசி அன்பர்களே….! இன்று உங்களுடைய செயலில் திறமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மகிழ்வை கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை மட்டும் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். காரியத்தில் ஒரு நல்ல அனுபவம் உண்டாகும்.
அரசு சார்ந்த வகையிலும் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள் அதன் மூலம் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.