கடக ராசி அன்பர்களே …! அனைத்து செயல்களிலும் நிதானம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் பழக்கத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். சீரான அளவு தான் பண வரவு வந்து சேரும். பெண்கள் நகைகளை தயவுசெய்து இரவலாக யாரிடமும் கொடுக்க,வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஓரளவு நிம்மதியும் சுகமும் ஏற்படும். மன வருத்தத்தில் விட்டுச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
கணவன் மனைவிக்கு இடையில் சுமுகமான உறவு இருந்தாலும் பேசும்பொழுது எப்போதும் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலைகள் இருந்துகொண்டிருக்கும். ஆனால் பிள்ளைகளின் கல்வியில் நல்ல மேன்மை அடைய கூடிய சூழலும் இருக்கிறது. உறவினர்களால் முன்னேற்றமான தகவல்கள் வந்துசேரும், வெளிநாட்டுச் செய்திகள் மனதை மகிழ்விக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும்.
கூடுமானவரை மற்றவரிடம் உரையாடும் பொழுது கோபப்படாமல் உரையாடல்கள் அது போதும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச்செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.