Categories
பல்சுவை

“உலக ரத்த தான தினம்” கொடுக்கும் தானத்தை குறையின்றி கொடுப்போம்…!!

கொடையாக வழங்கும் ரத்தம் முறையாக செலுத்தாததால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு.

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழக ஊடகங்கள் எழுப்பிய குரலில் அந்த பெண்ணிற்கான மருத்துவ மற்றும் உளவியல் உதவியை வழங்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலையும் வழங்க பட்டது. ஆனால் இப்படி கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்படுவது முதல் சம்பவமோ அல்லது ஒரே சம்பவமோ அல்ல.

2018-2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,342 பெயரில் முறையாக பரிசோதிக்காமல் ரத்தத்தை ஏற்றியதால் அவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியர் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்த அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் வழங்கியுள்ளது. இதில் தேசிய அளவில் உத்திரப்பிரதேசத்தில் 241 பேருக்கு ரத்த மாற்று சிகிச்சையில் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மனித உயிர் என கணக்கிடுகையில் எண்ணிக்கை பெரியது என்றாலும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் ரத்தம் மாற்றால் எச்ஐவி பரவுவதைத் பெருமளவு குறைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 2014-2015 ஆண்டுகளில் 7218 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 1,342 ஆக குறைக்கப்பட்டதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் எச்ஐவி பாதிக்கப்பட்டவரை முறையாக அடையாளம் காண்பதில் அரசும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது நிதர்சனம்.

இருப்பினும் இந்த முன்னேற்றமும் போதுமானதாக இல்லை என்பதை எச்ஐவிக்கு எதிராக போராடுபவர்கள் கூற்று. தற்போது தன்னார்வ ரத்த கொடையாளர்களுக்கான தேவையும் அதிகரித்து வரும் நிலையில் உரிய தரப் பரிசோதனைகளுடன் ரத்தம் பயனாளிகளுக்கு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியமாகின்றது. ரத்தம் மாற்றால் ஏற்படும் எச்ஐவி பாதிப்பு என்பது ஒரு சதவீதம்தான். ஆனால் அந்தப் ஒரு சதவீதம் என்பது ஒரு வெறும் எண் அல்ல உயிர். அந்த உயிர்களை அஜாக்கிரதையினால் இழக்காமல் இருப்பதே அவசியம் ஆகின்றது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |