Categories
தேசிய செய்திகள்

வேலையில்லை… அந்த தொழிலுக்கு சென்ற இளம்பெண்கள்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்குச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-கோரடி சாலையிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடக்கிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நாக்பூர்-கோரடி சாலையில் தரகர் மூலமாகப் பாலியல் தேவைக்குக் கேட்பதுபோல் கேட்டு போலீஸ்காரர் ஒருவர் சாதாரண உடையில், விஜயானந்த் சொசைட்டியிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், அந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம்பெண்கள் இருவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இது குறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு பெண் குஜராத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த அந்தபெண், கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் நாக்பூருக்கு வந்துள்ளார்.

மற்றொரு பெண் நாக்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். பின் ஊரடங்கின் காரணமாக அவரும் வேலையிழந்துள்ளார். இதனால் வேலையின்றி தவித்து வந்த இருவரும் தங்களது குடும்ப வறுமையைப் போக்குவதற்கு பாலியல் தொழிலுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். குடும்ப கஷ்டத்தை போக்க பாலியல் தொழிலுக்கு இளம்பெண்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |