உலகளவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7,739,831 பேர் பாதிக்கப்பட்டு, 428,337 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 3,966,262 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 3,345,232 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 53,887 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 140,917 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு 86,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 27,221 பேரும், பிரேசில் நாட்டில் 24,253 பேரும், ரஷ்யாவில் 8,987 பேரும், இந்தியாவில் 11,320 பேரும், , UK நாட்டில் 1,541 பேரும், ஸ்பெயின் நாட்டில் 502 பேரும், இத்தாலி நாட்டில் 163 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.