Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் பலி!

தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோவால் நேற்று மட்டும்18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்தம் எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனாவால் இறந்த 18 பேரில் 15 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 50வயதுக்கு மேல் உள்ள ஒரு பெண் உள்பட ஏழு பேருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. அதேபோல் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களுள் 40 வயதுக்கு மேல் 3 பெண்கள் உள்பட 8 பேருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோயாளிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சுகாதாரத்துறை சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதில், நோயாளிகள் நாள்தோறும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். ஊட்டசத்து மிகுந்த உணவுகளை சாப்பிடவும், உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி ஆகியவை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலவேம்பு, கபசுரக் குடிநீரை முறையாக தயாரித்து அருந்த வேண்டும் என சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |