முழு ஊரடங்கு குறித்து திங்கள் கிழமை காலை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது 5வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும் என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தமிழக அரசோ இப்போதைக்கு அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவிடம் வருகின்ற திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தமிழக அரசு ஆலோசிக்க உள்ளதாகவும், ஆலோசனைக்குப் பின் முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் கசிந்து வருகின்றன. முழு ஊரடங்கு சாத்தியமானால் பாதிப்பு குறைய வாய்ப்பு இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது