ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் நேற்று காலை திடீரென குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களில் வன்முறை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தமாத தொடக்கத்தில், ஐ.எஸ். ஐ. எஸ் தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையினர் காபூலில் ஒரு மசூதியை தாக்கியதில் பிரார்த்தனை தலைவர் பலியானார்.. மேலும், பலர் காயமடைந்தது நினைவுகூரத்தக்கது.