Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராஜஸ்தானுக்கு குறி வைத்த பாஜக….. நடுங்கும் காங்கிரஸ்… சொகுசு விடுதியில் தஞ்சம் …!!

பாஜக ராஜஸ்தானை குறிவைத்து சில அரசியல் நகர்வுகளை செய்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளார். அவரது ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.கவுக்கு மாறியதால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க தலைமையில் அரசு அமைந்தது. ஜூன் 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் கொரோனாவின் தாக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பாஜக குதிரை பேரத்தால் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததாக அம்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இருந்து கொண்டு மாநிலங்களவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 25 கோடி தர முயற்சித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகின்றது. மத்திய பிரதேசத்தில் போன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து பா.ஜ.க ஆட்சியை பிடிக்குமா என்று பெறுத்து இருந்து தான் பார்க்க முடியும். இதன் மூலம் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Categories

Tech |