நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்துள்ளார்.
விஜய்குமாருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகமான விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தணிக்கை குழுவிற்க்கு அனுப்பப்பட்ட இந்த படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்கப்பட்டது. மேலும்இப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.