தற்போது அஞ்சலி நாயர் ‘டிஜிபூட்டி’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங்குக்காக அஞ்சலி நாயர் உட்பட 70 பேர் கொண்ட படக்குழுவினர் ஆப்பிரிக்கா சென்றிருந்தனர். கொரோனா ஊரடங்கினால் அனைத்து விமானங்களின் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டதால் அவர்கள் நாடு (இந்தியா) திரும்ப முடியாமல் தவித்தனர்.
தற்போது அவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் பத்திரமாக கேரளா அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அஞ்சலி நாயர் உட்பட அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அஞ்சலி நாயர் கூறியதாவது, ‘’சொந்த ஊர் திரும்ப முடியாமல் இரண்டு மாதங்கள் வெளிநாட்டில் சிக்கி தவித்தேன், தற்போது ஊருக்கு வந்த பின்னும் தனது மகளை தொட முடியாமலும், கட்டிப்பிடிக்க முடியாமலும் மிகவும் தவிக்கிறேன். மூடப்பட்டிருக்கும் அறைக்குள் நான் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிக்கிறேன்“ என்றார்.