ஸ்ரீபெரும்புதூர் MLA வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. அரசியல் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையடுத்து வாழ்வாதாரம் நிறைய பேருக்கு பாதிக்கப்பட்டது.
அவர்களுக்கு உதவும் விதமாக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டலங்களாக பிரித்து அப்பகுதியில் உள்ள எம்எல்ஏ , அமைச்சர்கள் மூலமாக கொரோனா தடுப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ கொரோனா பணியில் ஈடுபட்டு பல உதவிகளை அம்மக்களுக்கு செய்து கொண்டிருந்தார். தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழனி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் , அதிமுக எம்எல்ஏ பாதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.