ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனுரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக விளங்கும் கொல்லிமலையில், மிளகு, காபி, ஏலக்காய், பலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்குள்ள, 14 ஊராட்சிகளில், 5,000 ஏக்கரில் மிளகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் மிளகு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக, வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகரித்து வருவது, இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. அதேபோல், கொல்லிமலையில், மிளகு செடிகளில், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பதிலளித்த அவர், கொல்லிமலை விவசாய தோட்டத்தில் காணப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.