பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்ளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனவைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் 77 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு மட்டும் 21 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகில் உள்ள 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா ஏழை பணக்காரன் என்று கூட பார்க்காமல் அனைவருக்கும் பயத்தை காட்டி வருகின்றது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவில் இருந்து மீண்டது நாம் அனைவருக்குமே தெரியும். இப்படி பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரரும் கொரோனவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மட்டும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2551 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்து 56 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 79 ஆயிரத்து 798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.