14-06-2020, வைகாசி 32, ஞாயிற்றுக்கிழமை.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30.
நாளைய ராசிப்பலன் – 14.06.2020
மேஷம்
மருத்துவ செலவுகள் உண்டாகலாம். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
ரிஷபம்
சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவியால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டி, பொறாமைகள் குறையும். எந்த வேலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். பெரியவர்கள் நன்மை ஏற்படும். உறவினர்கள் கைகொடுத்து உதவுவார்கள் . ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பொறுப்புடன் செயல்படுவதால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.
கடகம்
உங்கள் செயல்களில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத உதவிகளால் பணத்தேவை பூர்த்தியாகும். நெருங்கியவர்களால் மனக்கசப்புகள் உண்டாகலாம். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. புதிய முயற்சிகள் ஏதும் ஈடுபட வேண்டாம்.
கன்னி
எந்த செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதர சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
துலாம்
உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சனை தீரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் பலன் உண்டு. வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை கொடுக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். அக்கம்பக்கத்தினர் அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
தனுசு
பிள்ளைகளால் மனக்கஷ்டங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அனுசரித்து சென்றால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆடம்பர செலவுகள் வீண் விரயங்கள் உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
மகரம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தர்ம காரியங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும்.
கும்பம்
வெளியில் இருந்து வரவேண்டிய பண வரவில் தடைகள் ஏற்படலாம். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும் .
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் செயல் எளிதில் நிறைவேறும் மகிழ்ச்சியை கொடுக்கும். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறுப்பினர்கள் ஆதரவாக செயல் படுவார்கள். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.