சென்னையில் 97 வயது முதியவர் கொரோனா பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்தது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30 ஆம் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளான 97 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார் வைரஸ் தொற்றுக்கான தீவிர அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டா அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதியவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று நீங்கியது உறுதியானதால் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அதிக வயதுடைய நபர் இவராவார். நாள்பட்ட நோய்கள் இருந்தாலும் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மூலம் முதியவர் கொரோனாவிடம் இருந்து மீண்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் நிலையில் 97 வயது முதியவர் ஒருவர் கொடிய வைரஸ் இடமிருந்து மீண்டுருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.