போலி ஆவணங்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட இருந்த பிரியங்கா காந்தியின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் கொரோனா தொற்றை தொடர்ந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக பிரியங்கா காந்தி சார்பாக ஆயிரம் பேருந்துகள் சில தினங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதற்கு அரசிடம் பிரியங்கா காந்தி சார்பாக அனுமதி கோரப்பட்டது. அப்போது பேருந்துகளின் பதிவு எண்ணை சமர்ப்பிக்க அரசு கேட்க, அதன்படி ஆயிரம் பேருந்துகளின் பதிவு எண்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் அதில் பெரும்பாலானவை மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களின் பதிவு எண்கள் என தெரிவித்து உத்தரபிரதேசத்தில் பேருந்துகளை அனுமதிக்க மாநில அரசு மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி, அவரது உதவியாளர் சந்தீப் சிங், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் குமார் உட்பட பலர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸின் பொதுச்செயலாளர் அஜய் குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
பிறகு ஆவணங்கள் மோசடி செய்ததாக கூறி காவல்துறையினர் மீண்டும் அவரை கைது செய்தனர். பிரியங்கா காந்தியின் உதவியாளரான சந்தீப் சிங்கும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.. இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்வதில் இருந்துதடுக்க முன் ஜாமீன் கொடுக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதி மன்றத்தை சந்தீப் கோரியுள்ளார். இவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறிப்புகளை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு ஜூன் 17ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.