Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஏவிவிட்டு கிராமத்தை அழிக்கப்போவதாக மிரட்டல்…. போலி சாமியாரால் கிராமமக்கள் அதிர்ச்சி ….!!

மதுரை அருகே கொரோனாவை ஏவிவிட்ட கிராமத்தை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த போலிசாமியாருக்கு பயந்து முடங்கிக் கிடக்கும் கிராம மக்கள். தெக்கள் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர்.

உசிலம்பட்டியில் உள்ள கூறநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற சாமியார் வசியம் செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் தொடர்பாக சாமியாரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் . இதனையடுத்து பண்ணைபட்டி கிராமத்திற்கு சென்ற அந்தப் போலி சாமியார் தன்னை களங்கப்படுத்தி விட்டதாக கொரோனாவை ஏவி அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் உயிருக்கு பயந்து கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது. எனவே போலி சாமியார் தங்கப்பாண்டி கைது செய்ய கூறியும் கிராமம் முழுவதும் கிருமி நாசினியை தெளிக்க கூறியும் பண்ணைபட்டி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Categories

Tech |