கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மனதார விரும்பறேன் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்லபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 7,000திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் நேற்று அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற்று விரைவில் நலமடைய வேண்டும் என ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.