Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு…. 400ஐ நெருக்கும் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,183 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 1,362 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.84% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

12 வயதுக்குட்பட்ட 2,194 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 35,680 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,813 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |