சென்னையில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே குறைந்த அளவு இறப்பு விதத்தை பெற்றுள்ளது என்று தமிழகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு பாராட்டியது நாம் அனைவருக்கும் தெரியும். உயிரிழப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கும் போதெல்லாம், வயதானவர்கள், பிற நோய் உள்ளவர்கள் தான் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர் எனவே அவர்களை பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்று பல முறை சொல்லி உள்ளார்.
சொந்த ஊருக்கு திரும்பும் நிலை:
அதே போல தான் தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் பலபேர் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகவும், பிற வியாதிகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டு வருபவர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது கொரோனாவின் வீரியம் மிக கடுமையாக உள்ளது. தமிழகத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சென்னையில் இருக்கும் பலரும் பயந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு துரித செயல்பாடு:
தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்குள்ள 15 மண்டலங்களுக்கு அமைச்சர்கள் குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் கொரோனா அதிகமாக பரவாமல் இருக்கும் மக்களை மேற்கொண்டு காப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு ஆராய்ந்து துரிதமாக செயல்பட்டு வருகின்றது.
இதையடுத்து தான் சென்னையில் கொரோனா பாதித்த மண்டலங்களை தவிர்த்து மற்ற பகுதியில் இருக்க கூடிய தெருக்களில், மற்ற மண்டலங்களில் பாதிக்கத்தவர்களுக்காக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,
லிஸ்ட் ரெடி:
கொரோனா களப்பணியில் அனைத்து பணியாளர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களப்பணியில் இருக்கிறார்கள். அதுல ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுக்கிறவங்க கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் இருக்காங்க. அவுங்க ஒவ்வொரு வீடா எடுக்குறாங்க. அந்த வீடு எல்லாம் எடுத்ததன் அடிப்படையில் மொத்தம் எட்டு லட்சம் பேர் மீது கவனம் செலுத்தனும் என்று வரையறுத்துள்ளோம். சுகர் இருப்பவர்கள், டிபி இருப்பவர்கள், கிட்னி பிரச்சனை, லிவர் பிரச்சனை, 60 வயதுக்கு மேல இருப்பவர்கள் என ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்து 8 கண்காணிக்க இருக்கின்றோம் என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த பதில் சென்னை வாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.