சீனா தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என வலியுறுத்தி வரும் தைவான் வான்வெளியில் அமெரிக்கா விமானம் பறந்ததால் கண்டனம் தெரிவித்துள்ளது
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் தைவான் நாட்டில் சுய ஆட்சி முறையே கடைப்பிடிக்கப்படுகின்றது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் சீனாவோ தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்றே வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க போர் விமானம் தைவான் வான்வெளியில் சென்றுள்ளது. இதுகுறித்து தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “உரிய அனுமதியுடனே அமெரிக்க ராணுவம் தைவான் வான்வெளியில் நுழைந்தது.
எங்கள் நாட்டின் எந்த ஒரு விமான நிலையத்திலும் அமெரிக்க ராணுவ விமானம் தரை இறங்கவில்லை. அதற்கான அனுமதியும் நாங்கள் கொடுக்கவில்லை” என தெரிவித்திருந்தது. அந்த விமானம் ஜப்பானில் இருக்கும் விமான தளத்தில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு பொருட்களை ஏற்றி செல்லும் வழக்கமான விமானம். சில காரணங்களுக்காக தைவான் வான்வெளி வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா தொடர்ந்து தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி என வலியுறுத்தி வந்தாலும் அரசியல் ரீதியாக சீனாவில் இருந்து விலகியே இருக்கிறது.
தைவான் நாட்டின் வான்வெளியை முற்றிலுமாக அந்நாடே நிர்வகித்து வருகின்றது. இருப்பினும் அமெரிக்க போர் விமானம் தைவான் நாட்டின் வான்வெளியில் நுழைந்ததற்கு சீனா கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீனா-தைவான் விவகாரத் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க ராணுவ விமானத்தின் எங்கள் பாதுகாப்பு உரிமை ஆகியவற்றிற்கும் விளைவிப்பதாகவும் சர்வதேச சட்டத்தையும் விதிமுறைகளை மீறும் செயலாகவும் உள்ளது. இது சட்டவிரோதமான செயல் இதனால் அப்பகுதியில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். இது குறித்து கடுமையான அதிருப்தியை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
தைவான் வான்வெளி பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் வந்தபொழுது அதனை வேறு எந்த விமானமும் வழி மறிக்கவில்லை. அதோடு தாக்குதலும் நடக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ விமானம் வான்வெளியில் பறந்து அதேநாளில் சீனப் போர் விமானங்கள் தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வான்வெளியில் நுழைந்தது. அந்த விமானங்களுக்கு தைவான் நாட்டு ராணுவம் எச்சரிக்கை கொடுத்தது.
இதனிடையே சீனாவிற்கும் இடையே இருக்கும் சிறிய கடல் பகுதியில் தைவான் நாட்டின் தடுப்பை மீறி எதிர்ப்பை மீறி சீன ராணுவம் போர்ப் பயிற்சி செய்வதும் செய்யும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது இதே பகுதியில் சில தினங்களாக அமெரிக்காவின் போர்க் கப்பல்களும் ஈடுபட்டு வருகின்றனர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் சீனாவிற்கும் எந்தவித உறவும் இல்லை என்றாலும் தைவான் நாட்டிற்கு தேவையான ராணுவ தளவாடங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப் படுவது குறிப்பிடத் தக்கது.