மேஷ ராசி அன்பர்களே …! இன்று எதிரிகள் உங்களிடம் இருந்து விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றத்தைக் கொடுக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். பெண்கள் சிநேகமும் ஏற்படும். உடல்நல பாதிப்பு கொஞ்சம் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய் கூட வரலாம். பணப் பற்றாக்குறை ஓரளவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்துகொள்வது நன்மை கொடுக்கும். பேசும்போது மட்டும் நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பது ரொம்ப நல்லது. தேவையில்லாத பொருட்கள் மீது முதலில் ஏதும் செய்ய வேண்டாம். காதலர்களுக்கு வாக்குவாதங்கள் இல்லாமல் செல்ல வேண்டும் அப்பொழுது தான்
காதலில் ஒரு பிடிப்பு ஏற்படும். கூடுமானவரை நிதானத்தை கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.