Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…செல்வ வளம் பெருகும்…தெய்வ வழிபாடு அதிகரிக்கும் …!

தனுசு ராசி அன்பர்களே …!     அனைத்து நலன்களும் உங்களுக்கு தேடி வரும். பல வழிகளிலும் எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றத்தைக் கொடுக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செல்வ வளம் பெருகும். முன்னேற்றமான சூழல் உருவாகும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு ஏற்படும். சொத்துப் பிரச்சினைகள் அனைத்தும் சரியாக செயல் திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் கொஞ்சம் ஏற்படலாம்.

எதிரும் புதிருமாக பேசியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். மற்றவர்களுக்கு அக்கறையுடன் அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் மூலம் உன்னதமான செயல்கள் உங்களுக்கு நிறைவேறும். குடும்பத்தாரிடமும் மன மகிழ்ச்சியுடனும், கவனத்துடனும் காணப்படுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும், சீராக காணப்படும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |