கும்ப ராசி அன்பர்களே …! காரிய வெற்றி ஏற்படும் நாள் ஆக இருக்கும். அனைத்து வகையில் ஆதரவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஏற்றம் பெற புதுப்புது திட்டங்களை தீட்டுவீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காணமுடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பதவி உயர்வு ,நிலுவைத் தொகை பெறுவதில் தாமதம் இருக்கும். அதே போல பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது கோபம் காட்டாதீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சீரானதாக இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான சில பிரச்சினைகள் எழக்கூடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும்,சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.