சென்னையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த 42 வயது பெண் உட்பட 8 பேர் பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். திருமுல்லைவாயல், கொடுங்கையூர், அம்பத்தூர், அசோக்நகர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கத்தை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த முதியவர் (60), ஏழுகிணறை சேர்ந்த முதியவர் (74), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 72 வயது முதியவர், கொடுங்கையூரை சேர்ந்த 67 வயது மூதாட்டி, பொன்னியம்மன்பேட்டையை சேர்ந்த 82 வயது மூதாட்டி, வியாசர்பாடியை சேர்ந்த 76 வயது முதியவர், செங்குன்றத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.