Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்வு – 9,195 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,992 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 311 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 9,195ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,04,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 49,346 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,830 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 42,687 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 38,958 ஆக உள்ளது. குஜராத் மாநிலத்தில் 23,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 12,401, கர்நாடகாவில் 6,824 பேரும், ஹரியானா – 6,749 பேரும், பீகார் – 6,290, ஆந்திரா – 5,965, தெலுங்கானா – 4,737 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |