மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,292 கனஅடியில் இருந்து 1,643 கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.73 அடியாகவும், நீர் இருப்பு 65.79 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 1,643 கனஅடியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அறிவித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் நீர்வரத்து 1,643 கனஅடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.