Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்தத்தை மீறி… திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்..!!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய திடீர் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியிருக்கும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

மேலும், காயங்களுடன் உயிர் தப்பிய 3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.. இந்தத் தாக்குதல் ஷாபூர் – கேரி பகுதியில் நேற்றிரவு நடந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.. பூஞ்ச் மற்றும் ராஜவௌலி ஆகிய எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திவரும் தொடர் தாக்குதல்களின் விளைவாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 ராணுவ வீரர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்..

Categories

Tech |