மையலாடுத்துறை அருகே போலீசாரை போடுவேன் என வசனமிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே வசித்து வருபவர் செல்வமணி. இவர் காவல் நிலையம் ஒன்றில் உள்ள போலீஸ் தொப்பியை திருடி அதனை தலையில் மாட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வீர வசனத்துடன் பதிவிட்டிருந்தார். இந்த வசனம் வைரல் ஆகவே இதை கண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் குறிப்பிட்டிருந்த வசனம் என்னவெனில், யாருக்கேனும் போலீஸ் தொப்பியை போட தைரியம் இருக்கிறதா? போலீஸ் தொப்பியை போட முடியுமா? நான் போடுவேன். ரொம்ப டென்ஷன் ஆனால் போலீஸையே போடுவேன் என்று அவர் அதில் பதிவிட்டிருந்தார். வீர வசனத்துடன் சமூக வலைத்தளத்தில் கெத்தாக பதிவிட்ட இளைஞர் தற்போது வெத்தாகி கைதாகியுள்ள சம்பவம் மயிலாடுதுறை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.