Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 160 பேருக்கு கொரோனா… ! செங்கல்பட்டில் சமூக தொற்றா ? மக்கள் அச்சம் …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 160ஆக பதிவாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே இரட்டை எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மூன்று இலக்க எண்ணிக்கையில் பதிவாகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  பொதுவாக சென்னை புறநகர் பகுதியில் இருக்க கூடிய பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பரிசோதனையும் அதிகரித்துள்ளதால் கொரோனா எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது என்றும், இன்னும் கூடுதலாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 2865ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 1,150 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக முதல்வரும், தமிழக அரசும் இன்னும் சமூக தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்த நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Categories

Tech |