Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நல்ல மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையும் பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரள கடற்கரை, கர்நாடக கடற்கரை, இலட்சத்தீவு உள்ளிட்டப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45இல் இருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |