ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்துள்ள மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் டேனியல். 29 வயதுடைய இவர் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டேனியல் அப்பகுதியில் ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் டேனியலிடம் பணம் கொடு என மிரட்டி கேட்டுள்ளான். அதற்கு அவர் தர முடியாது என மறுத்துள்ளார்..
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் டேனியலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதனைப் பார்த்து தடுக்க ஓடி வந்த அவரது நண்பர்களான தேவராஜ், மகேஷ், பிரசாந்த் மற்றும் ராமு ஆகிய 4 பேரையும் கத்தியால் குத்திவிட்டு சரவணன் தப்பி ஓடி விட்டான்.
இதையடுத்து காயமடைந்த டேனியல் உட்பட 5 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சரவணனை வலைவீசி பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்..