Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகள் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கொரோனா தொற்று பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. காய்ச்சல் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்துதல், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல் , மருத்துவ உதவிகளை மேற்கொள்ளுதல் பணிகளையும் இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் முதியவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்தல் போன்ற பணிகளையும் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |